உஷார்... இன்று முதல் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கலாம்... வெதர்மேன் அலெர்ட்!

 
வெயில்

தமிழகத்தில் பல இடங்களில் வெயில் கொளுத்த தொடங்கியிருக்கும் நிலையில்  அடுத்த  5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.  அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெயில்

இந்நிலையில் வெயிலின் தாக்கம் குறித்து  தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ”வட மாவட்டங்களுக்கு ஆந்திர கடற்கரை அருகே உள்ள வேலூர், ராணிப்பேட்டைர திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்

இன்று முதலாவதாக  40C வெப்பம்  பதிவாகலாம் என தெரிவித்துள்ளார். மேலும்  சென்னையின் உட்புற பகுதிகளிலும் வெப்பமான நாளாக இருக்கும்.

வெயில்

இதே போல காஞ்சிபுரம் திருவள்ளுர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இந்த வருடத்தின் மிக வெப்பமான நாளை மார்ச் மாதத்திலேயே 38/39 C-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மீனம்பாக்கம் பகுதியானது அதிகபட்ச வெப்பத்தை பதிவு செய்யும்” என கூறியுள்ளார்.மேலும் மதுரை, சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களில் 38 செல்சியஸ் வெப்பநிலை இருக்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web