உஷார்... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை மையம் எச்சரிக்கை!

 
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

மழைக்காலங்களில் ரொம்பவே கவனமாக இருங்க மக்களே... அவசியம் இல்லாமல் முதியவர்களையும், கர்ப்பிணிகள், சிறுவர்களையும் மழை நேரத்தில் வெளியே தனியே அனுப்பாதீங்க. மின் சாதனங்களை கவனமுடன் கையாளுங்க. 

வடக்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது  தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வட வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது, அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும்” என்று தெரிவித்துள்ளது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் இருப்பதால் கடலோர ஆந்திரா மற்றும் ராய்லசீமா உள்ளிட்ட வட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பரவலாக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web