உஷார்... லட்சக்கணக்கில் பணம் பறிபோகும்... ஆன்லைனில் இதை எல்லாம் தேடாதீங்க... வங்கிகள் கடும் எச்சரிக்கை!

லட்சக்கணக்கில் உங்கள் பணம் பறிபோகும் வாய்ப்பிருக்கு... சமயங்களில் உங்கள் நிலுவைத் தொகையைப் பொறுத்து, ஏமாறும் அப்பாவித்தனத்தைப் பொறுத்து கோடிகளில் கூட பணம் பறிபோக வாய்ப்பிருக்கு. ஆன்லைனில் இதையெல்லாம் தயவு செய்து தேடாதீங்க” என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதுமாக சமீப காலங்களாக அதிகளவில் வங்கி மோசடிகள் அரங்கேறி வருகின்றன. டிஜிட்டல் அரெஸ்ட் என்கிற பெயரில் அவஸ்தைகளை அனுபவித்து, பணத்தையும் பலரும் லட்சக்கணக்கில் இழக்கின்றனர். அந்த வகையில் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்களை பயன்படுத்தி மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்தது. வங்கி தொடர்பு எண்கள், ஆன்லைன் பேங்கிங் கார்டு புகார் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு வாடிக்கையாளர் சேவை மையங்கள் வங்கி மூலம் வழங்கப்பட்டு உள்ளது.
வங்கிகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயரை பதிவிட்டு வாடிக்கையாளர் சேவை எண்ணை பெறுவார்கள்.அதில் சில செல்போன் எண்களும் வருகின்றன. இவ்வாறு தேடப்படும் எண்களை சமீப நாட்களாக மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது.
உண்மை தன்மை தெரியாத பலரும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு வருவதால் பண மோசடியில் மோசடி கும்பல் ஈடுபட்டு வருகிறது. எனவே ஆன்லைன் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்களை தேட வேண்டாம். வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல்களை தெரிந்து கொள்வது சரியானதாக இருக்கும் என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!