25 மாவட்டங்களுக்கு அலெர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று உருவாக இருக்கும் புயலுக்கு 'பெங்கல்' எனப் பெயரிடப்பட உள்ளது. இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!