உஷார்... இன்று இந்த பகுதியில் மின்சார ரயில்கள் ரத்து!

 
ரயில்
மக்களே பத்திரம்.. அவசரத்துல போய் சிக்கிக்காதீங்க. முறையாக முன்கூட்டியே அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்துக்கோங்க.. இன்று சென்னையில் இந்த வழிதடத்தில் மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சூலூர்பேட்டை வழித்தடத்தில் இன்றைய தினம் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சூலூா்பேட்டை, தடா ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.

மின்சார ரயில்

சென்னை சென்ட்ரலில் (மூா்மாா்க்கெட் வளாகம்) இருந்து சூலூா்பேட்டைக்கு இன்று அதிகாலை 5.15 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் இன்று நவ.9ம் தேதியும், நவம்பர் 12 ம் தேதியும் ரத்து செய்யப்படும்.

அதே போல் சூலூா்பேட்டையில் இருந்து நெல்லூருக்கு காலை 7.55 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நவ. 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

மின்சார ரயில்
ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நவம்பர் 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். அத்துடன் சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 4.15, காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவம்பர் 9, 12 தேதிகளில் எளாவூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45, 7.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாற்று ஏற்பாடுகளைச் செய்துக்கோங்க.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web