உஷார்... மறந்துடாதீங்க... இந்த மாதம் முதல் அனைத்து சனி, ஞாயிறுகளிலும் வங்கி விடுமுறை!

 
குட் நியூஸ்!! வீட்டுக்கடன் வட்டி அதிரடி குறைப்பு! எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு!

மறந்துடாதீங்க... அவசர காலத்துல பண பரிவர்த்தனைகளுக்கு அவஸ்த்தைப்படாதீங்க. முன்பே திட்டமிட்டுக்கோங்க. இந்த மாதம் முதல் ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்கள்படி, வங்கி வேலை நாட்களில் புதிய விதி அமலுக்கு வருகிறது. இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் விடுமுறை தினங்கள் இல்லாமல் பொதுவாக வாரத்தில் 6 வங்கிகள் செயல்படுகின்றன. இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை மட்டும் விடுமுறை என கணக்கிட்டு, வாரத்தில் 5 நாட்கள் செயல்படும். ஆனால் இந்த விதி மாறுகிறது.

மத்திய அரசு தற்போது ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் விளைவாக வங்கி ஊழியர்களின் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது. வங்கி ஊழியர்கள் வைத்த விடுமுறை கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. எனவே இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கும்.

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

ஏப்ரல் மாதம் முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்ற நாட்களில் வங்கி மூடப்படும். குறிப்பாக அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படும்.  நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே செயல்படும். கார்ப்பரேட் அலுவலகங்கள் போல வங்கி 5 நாள் வேலை, 2 நாள் விடுமுறை நாட்களாக இருக்கும்.

சனி மற்றும் ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் பல காலமாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது குறித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஆர்பிஐக்கும் பல மனுக்கள் அளிக்கப்பட்டன. இறுதியாக ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை நாளாக அறிவிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

வங்கி

அதன்படி ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விதி அமலுக்கு வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி வேலைக்காக செல்லும் முன் திட்டமிடவும்.  சனிக்கிழமை வங்கி வேலைகளை முடித்துக்கொள்ளும் எண்ணம் இருந்தால், ஏப்ரல் மாதத்திலிருந்து சாத்தியமில்லை. 

சனிக்கிழமை வங்கி மூடப்படுவதால் இரண்டு ஷிப்ட்களில் வங்கியை திறக்க மத்திய அரசு யோசித்து வருகிறது.  இது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. எந்த மாதிரி ஷிப்ட் என்பது குறித்து இறுதி வடிவம் தயாராக உள்ளது.   வாடிக்கையாளர்களை மனதில் வைத்து மாலைக்கு மேலேயும் வங்கியை திறக்க யோசித்து வருகிறது. வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை கிடைக்க வேண்டுமெனில்  மீதமுள்ள 5 நாட்கள் வங்கி ஊழியர்கள் அதிக வேலை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் இரண்டு ஷிப்ட்களில் வேலை இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web