உஷார்... இன்று முதல் கட்டிட திட்ட அனுமதி இணையதளம் மாற்றம்!

 
ரிப்பன் மாளிகை

உஷார் மக்களே... பழைய இணையதளத்தில் ஏமாறாதீங்க. அதே போன்று இணையதளம் மாற்றப்பட்டுள்ளது என்று புதிதாக யாராவது சொன்னால், அதை சரியான இணையதள முகவரியா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்க. இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டிட திட்ட அனுமதி இணையதள மாற்றம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் கட்டிட திட்ட ஒப்புதல் நிகழ்நிலை அமைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பில்டிங் கட்டுமானம் தொழிற்சாலை  கட்டிடம் பொறியியல்

திட்ட அனுமதி விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் பெற்று செயலாக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், பொதுமக்களுக்காக இந்த சேவையை மேம்படுத்த வேண்டி இந்த கட்டிட திட்ட ஒப்புதல் நிகழ்நிலையை தமிழ்நாடு ஒற்றைசாளர போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படுகின்றது.

கட்டுமானம் கட்டிடம் தொழிலாளர்கள்

ஏப்ரல் 1ம் தேதி முதல் சென்னை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்ட்டல் இணையதளம் மூலம் தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், 31.3.2025 மற்றும் அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையிலேயே ஒப்புதல் வழங்கப்படும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web