உஷார்.... ஏப்ரல் மாத வங்கி விடுமுறை தினங்கள் அறிவிப்பு... இப்பவே திட்டமிட்டுக்கோங்க!

புதிய நிதியாண்டு இன்று துவங்க உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க பண பரிவர்த்தனைகளை அதற்கேற்ப திட்டமிட்டுக்கோங்க.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதற்கான விடுமுறை மற்றும் செயல்படும் பணிநாட்களையும் ரிசர்வ் வங்கி தான் நிர்ணயிக்கிறது. வங்கிப்பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் வங்கிக்கு செல்ல வேண்டிய முக்கிய பணிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள ஏப்ரல் மாத வங்கி விடுமுறை பட்டியலை ஒருமுறை செக் செய்துகொள்ளலாம்.
ஏப்ரல் 1, 2025, செவ்வாய்க்கிழமை : சர்ஹுல், ஒடிசா தினம், இதுல் பித்ர் (ஜார்கண்ட், ஒடிசா, நாடு முழுவதும்)
ஏப்ரல் 5, 2025, சனிக்கிழமை : பாபு ஜக்ஜீவன் ராம் ஜெயந்தி (ஆந்திரா, தெலுங்கானா)
ஏப்ரல் 6, 2025 , ஞாயிற்றுக்கிழமை : ராம நவமி (நாடு முழுவதும்)
ஏப்ரல் 10, 2025, வியாழக்கிழமை : மகாவீர் ஜெயந்தி (நாடு முழுவதும்)
ஏப்ரல் 12,2025, சனிக்கிழமை : 2வது சனிக்கிழமை
ஏப்ரல் 13, 2025, ஞாயிற்றுக்கிழமை : வைசாகி, மகா விஷுபா சங்கராந்தி (பஞ்சாப், ஹரியானா, ஒடிசா)
ஏப்ரல் 14, 2025, திங்கட்கிழமை : தமிழ் புத்தாண்டு, விஷு, போஹாக் பிஹு (தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம்)
ஏப்ரல் 18, 2025, வெள்ளிக்கிழமை: புனித வெள்ளி (நாடு முழுவதும்)
ஏப்ரல் 20,2025, ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 21, 2025, திங்கட்கிழமை: கரியா பூஜை (திரிபுரா)
ஏப்ரல் 28 ,2025, சனிக்கிழமை: 4 வது சனிக்கிழமை
ஏப்ரல் 29, 2025, ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 30, 2025 புதன்கிழமை: பசவ ஜெயந்தி (கர்நாடகா)
வங்கி தொடர்பான பெரும்பாலான பணிகளை ஆன்லைனிலேயே செய்ய முடியும். இதை ரிசர்வ் வங்கியும் ஊக்குவிக்கிறது. இந்த பணிகளை முடிக்க நீங்கள் வங்கிக் கிளைக்கு செல்ல தேவையில்லை. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் (Net Banking), மொபைல் பேங்கிங் (Mobile Banking) அல்லது வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
ஏப்ரலில் 13 நாட்கள் வங்கிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வங்கி தொடர்பான பெரும்பாலான பணிகளை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்துகொள்ளலாம். இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் , மொபைல் பேங்கிங் ( அல்லது வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!