உஷார்... 75 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று... இன்று தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

புயல் உருவாக உள்ள நிலையில், இன்று தமிழகத்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பில், ‘இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 110 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 530 கிமீ தொலைவிலும் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி வரை மழை நீடிக்கும். இன்று நவம்பர் 28ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை

நாளை (நவ.29) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 19 செ.மீ., கோடியக்கரை, வேளாங்கண்ணியில் 18 செ.மீ., திருப்பூண்டியில் 14 செ.மீ., சென்னை மணலி, திருக்குவளையில் 13 செ.மீ., வேதாரண்யத்தில் 12 செ.மீ., மாமல்லபுரம், செய்யூர், தலைஞாயிறு, சீர்காழி, தரங்கம்பாடி, சென்னை கத்திவாக்கம், மரக்காணம், கடலூர் மாவட்டம் வடகுத்து பகுதிகளில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும்.

மழை

தமிழக கடலோரம், அதை ஒட்டிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். 29, 30-ம் தேதிகளில் வட தமிழக கடலோரம், அதை ஒட்டிய பகுதிகளில் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட கடலோரப் பகுதிகளில் வரும் 29-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அதிகபட்சமாக 3.5 மீட்டர் உயரம் வரை அலை எழும்பக்கூடும் என இன்காய்ஸ் (INCOIS) எச்சரித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web