நடிகர் அஜீத் அரசியல் எண்ட்ரி?! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
அஜீத்

 1993ல் அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அஜீத்.   தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே  அடுத்தடுத்த படங்களில் இவரது கதாபாத்திரங்கள் பேசப்பட்டன.  1995-ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம்  தமிழில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.   காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ’தல’  ஆக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.  

அஜீத்


தற்போது இயக்குநர் மகிழ்திருமேனி  இயக்கத்தில் உருவாக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த திரைப்படம்  லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகிறது. இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கின்றனர்.  படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்பொழுது வெளியான புகைப்படம் ஒன்று   ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.

அஜீத்

 அந்த புகைப்படத்தில், அரசியவாதிகள் இருவருக்கும் நடுவே அஜித் கெத்தாக கூலிங் கிளாஸ் உடன் மாஸாக நின்று போஸ் கொடுக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அஜித் அரசியலுக்கு வருகிறாரா? என புரளியை கிளப்பி வருகின்றனர்.அவர், அரசியலுக்கும் வரவே வேண்டாம் விடாமுயற்சி திரைப்பட ஷூட்டிங்கை தொடங்க வேண்டும் என ரசிகர்கள் குமுறி வருகின்றனர். அந்த புகைப்படத்தை வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையுடன் நிற்கும் இருவரும் அஜித்தின் ரசிகர்களாக கூட இருக்கலாம். எது என்னவென்று தெளிவாக தெரியாமல், வதந்தியை பரப்பிவிட வேண்டாம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அஜித்தின் மேலாளர் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web