வாவ்... ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் ஸ்பெஷல் கிப்ட்...!
தமிழ் திரையுலகில் தல ஆக வலம் வரும் நடிகர் அஜீத்தின் காதல் மனைவி ஷாலினி. இவர் அமர்க்களம் படம் நடித்த போது ஷாலினியை காதலித்து கரம் பிடித்தார்.ஷாலினி 5 படங்களில் தொடர் வெற்றியை கொடுத்த ஷாலினி, முன்னணி நாயகியாக இருக்கும்போதே நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
கடந்த 22 ஆண்டுகளாக ஷாலினி ஒரு படத்தில் கூட தலைகாட்டவில்லை இருந்தாலும் அவரின் படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன. இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். அஜித் - ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் நடிகை ஷாலினி நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நடிகை ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி ஷாலினி தன்னுடைய பிறந்தநாளை தனது தங்கை ஷாமிலி, தம்பி ரிச்சர்டு, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் கொண்டாடி உள்ளார். நடிகர் அஜித் வெளிநாட்டில் இருப்பதால் தன் மனைவிக்கு சர்ப்ரைஸாக ஒரு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தனக்கு பிடித்த லெக்சஸ் காரை மனைவி ஷாலினிக்கு பரிசாக கொடுத்துள்ளார் அஜித்.
கணவர் கொடுத்த காஸ்ட்லி கிஃப்டை தொடர்ந்து ஷாலினியின் பிறந்தநாளுக்கு அவரது மகன், மகள், தங்கை, தம்பி அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஆளுக்கு தலா ஒரு கேக் வீதம் மொத்தம் நான்கு விதமான கேக்குகளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!