மாஸ் வீடியோ... 234 கிமீ வேகத்தில் ஆடிக்காரில் சீறிப்பாயும் ’தல’ அஜீத்!
தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமாரின் அடுத்த படம் விடாமுயற்சி. ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான 'துணிவு' படத்திற்கு பிறகு விடாமுயற்சி வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக இப்படம் வெளியாகலாம் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Exclusive : Video Of Our CHIEF #Ajithkumar 😎 #RacingLife🏎️💪#VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/7flTirVugu
— Kannan Pandian (@Kannan_1363) August 28, 2024
'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இடையில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பேக் டூ பேக் நடைபெற்று வந்தது. அந்த வகையில் ஐதராபாத்தில் மும்மரமாக நடைபெற்று வந்த 'குட் பேட் அக்லி' படத்தின் ஷூட்டிங் தற்போது முழுமையாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஸ்பெயினில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 7
0 % படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதால் இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய ஆடி காரை 234 கிலோ மீட்டர் ஸ்பீடில் ஓட்டும் ரேசிங் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. அவர் பயங்கரமான கார் ரேசர் மற்றும் பைக் ரேசர் என்பது அனைவரும் அறிந்ததே. ரேசிங் மீது அவருக்கு இருக்கும் பேஷனை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதவர். அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மனசெல்லாம் பதறத் தொடங்கி விடுகிறது. ஆனால் எந்த ஒரு ரியாக்க்ஷனும் இல்லாமல் அத்தனை அமைதியாக காரை ஒட்டி செல்கிறார் அஜித். இந்த வீடியோ ரசிகர்கள் கொண்டாடி ஷேர் செய்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!