ஓசூரில் விமான நிலையமா? எங்களிடம் எந்த கோரிக்கையும் வரலையே.. கையை விரித்த மத்திய அமைச்சர்!

 
விமான நிலையம்

பெங்களூருவுக்கு போட்டியாக ஓசூர் வளர்ந்து வரும் நிலையில், ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஓசூர் நகரமும் ஒன்று. பெங்களூரை ஒட்டியுள்ளதால் ஓசூர் நகரின் வளர்ச்சி வேகமாக இருந்து வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பெங்களூருக்கு சவால் விடும் வகையில் நகரின் வளர்ச்சி அபார வேகத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இதற்கு மேலும் உதவும் வகையில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

விமானம் விமான நிலையம்

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ""உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழகத்தை நோக்கி வருகின்றன. இந்த நிறுவனங்களின் மூலம் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியடைந்து தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு முன்னேறியுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மாநிலம் முன்னணியில் உள்ளது. 2020ஆம் ஆண்டில் புத்தாக்க வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில் கீழே இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயல்திறன் அந்தஸ்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பொருளாதாரத்தில் 2வது பெரிய மாநிலமாக உள்ள தமிழகம், 2030க்குள் தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை விரைவாக அடைய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உருவாகி வருகிறது.அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக தொழில்களை உருவாக்கி வருகிறோம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தித் துறையில், ஓசூர் கடந்த சில ஆண்டுகளாக அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் ஓசூரை தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக மாற்றவும், அங்கு நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆண்டுக்கு 3 கோடி பயணிகள்: ஓசூருக்கு புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தருமபுரியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது. எனவே, ஓசூரில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில், 2,000 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்,'' என்றார்.இதற்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்தாலும், பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், அதிமுக எம்பி சிவி சண்முகம் ராஜ்யசபாவில் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள் மற்றும் விமான நிலையத்திற்கான திட்ட செலவுகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, விமான நிலையம் அமைப்பதற்கான எந்த முன்மொழிவும் வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.2008-ம் ஆண்டு கிரீன்ஃபீல்டு விமான நிலையக் கொள்கையின்படி ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான எந்த முன்மொழிவும் தமிழக அரசிடமிருந்தோ அல்லது விமான நிலைய மேம்பாட்டாளரிடமிருந்தோ வரவில்லை. அதேபோல், மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயக்க விமான நிறுவனங்களிடம் இருந்து முறையான கோரிக்கை எதுவும் வரவில்லை,'' என்றார்.

சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த திட்டத்திற்கான முன்மொழிவு இதுவரை தனக்கு வரவில்லை என மத்திய அமைச்சர் கூறியிருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பதாரர் வழிகாட்டல் குழுவின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அல்லது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) க்கு அனுப்பப்படும். அனுமதி கிடைத்தால், குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என, துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web