நவம்பர் 19க்குள் ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம்... காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்!

 
காலிஸ்தான்
 

நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பன்னுன் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சீக்கிய இனப் படுகொலையின் 40வது ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் நிறுவனரான பன்னுன் கடந்த ஆண்டும் இப்படியான எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

காலிஸ்தான்

முன்னதாக கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. பின்னர் இவை புரளி என்று தெரியவந்தது. இத்தகைய சூழலில் பன்னூனின் மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுன்(56). நீதிக்கான சீக்கியர்கள்(எஸ்எப்ஜே) என்ற அமைப்பை ஏற்படுத்தி பஞ்சாப்பில் காலிஸ்தான் பகுதியை உருவாக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார்.

காலிஸ்தான்

பிரிவினைவாதத்தை தூண்டும் இவரை சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் தீவிரவாதியாக, மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு அறிவித்தது. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. சீக்கியர் படுகொலை நினைவு தினம் கடந்தாண்டு அனுசரிக்கப்பட்டபோது, ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பறக்க வேண்டாம் என இவர் மிரட்டல் விடுத்தார். அதேபோல் தற்போதும் சீக்கியர் படுகொலையின் 40வது நினைவு தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web