தொடரும் அரசியல் கொலைகள்... அதிமுக வார்டு செயலாளர் விரட்டிக் கொலை!

 
பக்தா
 

தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் கொலைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஜூன் மாதம் சேலத்தை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அடுத்து பாமக நிர்வாகி, இதன்பிறகு  பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர்,  இதனையடுத்து மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை என  அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன. இந்நிலையில் கடலூர் பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 பக்தா

கடலூர் நவநீதம் நகர் பகுதியில் வசித்து வருபவர் 43 வயது பக்தா (எ) பத்மநாதன்.  இவர்  அதிமுக வார்டு செயலாளராக பணிபுரிந்து  வந்தார். நேற்று இரவு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருப்பனம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பக்தா மீது மர்ம கும்பல் காரை மோதியுள்ளது.
ஆம்புலன்ஸ்இதில் நிலைதடுமாறி பத்மநாதன் கீழே விழுந்துவிட்டார்.  அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது.  புதுவை மாநில எல்லை பகுதியான திருப்பனாம்பாக்கம் பகுதியில்  பக்தா வெட்டிக் கொல்லப்பட்டார். கடலூர் பகுதியில் வசித்து வருபவர்கள்  முன்விரோதம் காரணமாக வெட்டியதாக பாகூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பத்மநாதன் கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  பாஸ்கரின் கொலைக்கு பழி வாங்க இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் எனத் தெரிகிறது.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web