அதிமுக மூத்த தலைவர் எம்.சுப்பையன் காலமானார்!
Aug 27, 2024, 08:36 IST
தமிழகத்தில் அதிமுக கட்சியின் விவசாய அணி துணைத் தலைவர் எம். சுப்பையன். இவர் உடல்நல குறைபாடு காரணமாக காலமானார். சுப்பையன் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து உடன் இருந்தவர். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இவர் அதிமுகவின் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.
இவர் அதிமுக கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். அதன் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த போது அவர் இபிஎஸ் பக்கம் பிரிந்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு எஸ்பி வேலுமணி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
From
around the
web