அதிமுக நிர்வாகியை துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. குற்றவாளி அடுத்து செய்த அதிர்ச்சி சம்பவம்!
அ.தி.மு.க., பிரமுகரை கொன்ற கையுடன் நபர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நாட்டகுடியில் வசித்து வருபவர் கணேசன். இவர் அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் சாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அந்த பகுதியில் பெட்டிக்கடையை திறக்க சென்ற அவர் மர்ம நபரால் கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. உடனே அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில், கொலை செய்யப்பட்ட கணேசனின் ஆதரவாளர்களும், அ.தி.மு.க.வினரும் அரசுப் பேருந்தை மறித்து கொலைச் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த கொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த குண்டுமணி, கணேசனை கொன்றது தெரியவந்தது. போலீசார் குண்டுமணியை தேடி வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குண்டுமணி இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று குண்டுமணியை கைது செய்தனர். இந்நிலையில், தனது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பெயரில் மனு அளிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குண்டுமணி வந்ததாகத் தெரிகிறது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் ஊரில் முக்கிய பிரமுகராக இருந்த கணேசன் விநாயகர் கோயில் கட்டியுள்ளார். கோவிலில் இருந்த விநாயகர் சிலையை தூக்கி, குண்டுமணிகிணற்றில் வீசினார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதே நேரத்தில் தகராறு காரணமாக பிரிந்த மனைவி பவித்ரா, மாமியார் கருப்பாயி ஆகியோரை அரிவாளால் வெட்டிய குண்டுமணி, மதுரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அதிமுக கிளை செயலாளர் கணேசன் கடையை திறந்து கொண்டிருந்தார். அப்போது வாக்குவாதம் எழுந்த நிலையில் ஆத்திரமடைந்த குண்டுமணி அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்துள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!