மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்... ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
பிக்பாஸ் 8


 
 பிக்பாஸ் சீசன் 8  தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட  இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் ஆரம்பத்திலேயே பல வித டிவிஸ்ட்கள் இருந்தன.  ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டு பிக்பாஸ் சரியான செக் வைத்தார்.
இந்த சீசன் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. அதுமட்டுமின்றி  விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்ற ஒரு வித எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் தன்னுடைய பாணியில் ஆரம்பம் முதலே இன்றளவு வரை போட்டியாளர்களை  வச்சு செய்து வருகிறார் விஜய் சேதுபதி. இது ஒரு கட்டத்தில் போட்டியாளர்களிடம் எரிச்சலை ஏற்படுத்த கமல் அளவுக்கு விஜய்சேதுபதிக்கு உள்ளே இருக்கும் ஒரு சில ஆண் போட்டியாளர்கள் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்பதுபோல தெரிகிறது. 

பிக் பாஸ் 8


நேற்று வெளியேற வேண்டிய சாச்சனா விஜய்சேதுபதியின் வற்புறுத்தலால்  லிஸ்டிலேயே இல்லாத வர்ஷினி நேற்று வெளியேற்றப்பட்டார். மகாராஜா படத்தில் இருந்து இன்னும் விஜய்சேதுபதி வெளியே வராமல்தான் இருப்பதாக அப்பா மகள் பாசத்தால் ஓவராக ஆட்டம் போடுவதாக   சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் 8 அப்டேட்ஸ் | முதல் நாளே வெளியேறிய போட்டியாளர்... இந்த சீசனின் காதல் ஜோடி யார்?
இந்நிலையில் மீண்டும் பிக்பாஸை கமல் தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  கமலின் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கோவை தங்கவேலு பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்த முறை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அமெரிக்கா சென்றதால் அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த முறை தொகுத்து வழங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.  
ஏற்கனவே கமல் இந்த சீசனில் இல்லாததே பெரிய குறையாக மக்கள் பார்க்கிறார்கள். ஏனெனில் போட்டியாளர்களை சரியான முறையில் கையாண்டு எப்படியும் அவர் வழிக்கு கொண்டு வந்து விடுவார். ஆனால் விஜய்சேதுபதி அலட்சியமாக  பண்ணி வருவதாக கூறி வருகின்றனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web