மீண்டும் தொடர் மின்வெட்டு அபாயம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

 
மீண்டும் தொடர் மின்வெட்டு அபாயம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இந்தியாவில் நிலக்கரி கையிருப்பு குறைந்து வருகிறது. இந்தியாவிற்கு தேவையான பெரும்பான்மையான மின்சாரம் நிலக்கரி மூலமே தயாரிக்கப் படுகிறது. பெரும்பாலான மாநிலங்கள் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்துள்ளன.

கையிருப்பு நிலக்கரி அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கே இருக்கும் எனவும், அதே போல் 3 நாட்களுக்கு மட்டுமே மின் விநியோகம் செய்ய முடியும் எனவும் தலைநகர் டெல்லி உள்பட பல மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

மீண்டும் தொடர் மின்வெட்டு அபாயம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!


இதனை உறுதி செய்யும் வகையில் தலைநகர் டெல்லி இருளில் மூழ்கும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.மின் விநியோகத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாநில அரசுகள் நிலக்கரி கையிருப்பு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், ‘இனி தினமும் 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்’ என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

மீண்டும் தொடர் மின்வெட்டு அபாயம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த 3 மணி நேரம் மின்வெட்டு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.இந்தியாவின் பிற மாநிலங்களின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களிலும் இனி மின்வெட்டு அதிகரிக்கலாம் எனவும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

From around the web