ஆதவ் அர்ஜூனாவுடன் எந்த தொடர்புமில்லை... கதறியழும் லாட்டரி மார்ட்டின் மகன்!

"ஆதவ் அர்ஜூனா செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்.
அவருக்கிருக்கும் பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு பல கட்சிகளில் இணைந்து வருகிறார். அவர் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடரும் பட்சத்தில், வழக்கு தொடரப்படும். பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!