என்னால முடியல.. பிரபல நடிகை வருத்தம்... வைரலாகும் வீடியோ!

 
ஸ்ரேயா

தமிழ்நாட்டுக்கு நிறைய முறை ஷூட்டிங் வந்திருக்கேன். அடுத்தடுத்து நிறைய தமிழ் படங்களில் நடிச்சிருக்கேன். ஆனாலும் எனக்கு தமிழ் பேச வரல என நடிகை ஸ்ரேயா வருத்தத்துடன் பேட்டி அளித்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் நடிகை ஸ்ரேயா வருத்தப்படுவதற்கு கமெண்ட் செய்தாலும், அதிகளவில் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ரஜினி, தனுஷ், விஜய்ன்னு நிறைய பேர் கூட நடிச்சாச்சு. இவ்வளவு தமிழ் படங்களில் நடிச்சும் தமிழ் தெரியலைன்னா... இங்க இருக்கிறவங்க கூட தமிழ்ல பேச முயற்சியே செய்யாம, இந்திக்காரங்களையே டச்சப், மேக்கப், மேனேஜர், பி.ஆர்.ஓ.ன்னு வேலைக்கு வெச்சிக்கிட்டது தான் காரணம். நடிகை த்ரிஷா கூட பார்ட்டிக்கு போறது, தனுஷ் கூட பார்ட்டிக்கு போறதுன்னு ஜாலியா இருந்தப்ப கொஞ்சம் தொழில் மேல் அக்கறைக் காட்டி தமிழையும் கத்துக்கிட்டு இருந்திருக்கலாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் கத்துக்கிட்டு, அந்தந்த மாநிலத்துல படங்கள் ரிலீசானப்போ அவங்க மொழியைப் பேசுன வீடியோக்கள் இருக்கிறப்போ தமிழ் ரசிகர்கள் தானேங்கிற ஏளனம் தான் காரணம்னு ட்ரோல் செய்து வருகிறார்கள்.

2001ல் ‘இஷ்டம்’ தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா. அதன்பின், 2003ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2005-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘மழை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூ கோச்சே என்பவரை ஸ்ரேயா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கணவருடன் பார்சிலோனாவில் குடியேறினார். அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து சென்றார்.

ஸ்ரேயா

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, அவ்வப்போது குடும்பத்தினருடன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. தற்போது சில படங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஸ்ரேயா, எனக்கு தமிழ் பேச வரல என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web