நடிகை ரேகா நாயர் கார் மோதி ஒருவர் பலி! ஓட்டுநர் கைது!
தமிழகத்தில் நடிகை ரேகா நாயரின் கார் மோதி மஞ்சன் (55) என்பவர் உயிரிழந்த நிலையில், கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஜாஃபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சன். இவர் நேற்றிரவு ஜாஃபர்கான்பேட்டை பகுதியில் சாலையில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் படுத்திருந்த மஞ்சன் மீது ஏறி இறங்கியுள்ளது. கார் ஏற்றியதில் மஞ்சன் அலறி துடித்துள்ளார்.
மஞ்சன் மீது காரை ஏற்றிவிட்டு, அங்கிருந்து நிற்காமல் கார் வேகமாக அந்த பகுதியைக் கடந்து சென்றுள்ளது. மஞ்சனின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் விரைந்து சென்று மஞ்சனை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மஞ்சன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மஞ்சனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலறிந்த கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சியில் விபத்தில் உயிரிழந்த மஞ்சனை ஏற்றிச் சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில், அந்த கார் பிரபல நடிகையான ரேகா நாயரின் கார் என்பதும் காரை ஓட்டிச் சென்றவர் ரேகா நாயரின் ஓட்டுநர் பாண்டி (25) என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் பாண்டியைக் கைது செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!