நடிகை ரச்சிதாவுக்கு இயக்குநருடன் 2வது திருமணம்...?

 
ரச்சிதா

 
சின்னத்திரை நடிகை ரச்சிதா  கன்னட திரைப்பட இயக்குநர் ஒருவரை  காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் , விரைவில் திருமணம் செய்துக் கொள்வதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள்  வெளியாகியுள்ளன. சின்னத்திரை காதல் ஜோடிகள்  தினேஷ்-ரச்சிதா . இவர்கள் இருவரும்   2013ல்   திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து 8 வருடங்களாக இணைபிரியா தம்பதியர்களாக இருந்து வந்த இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது . இதனால்  கடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ரச்சிதா
இது குறித்து தினேஷ் தரப்பில், நடிகை ரச்சிதா பதில் எதுவும் சொல்லவில்லை.  சமாதானத்திற்கும்  இறங்கி வரவில்லை என தெரிகிறது.  அதே நேரத்தில் இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும்  ரச்சிதா கேட்டால் விவாகரத்து தர தயாராகவே இருக்கிறோம் எனவும்  அவர்கள் பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினேஷ் நடிகை ரச்சிதாவுக்காகவே 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். ஆனாலும் ரச்சிதா  தினேஷை விட்டு பிரிவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்.

ரச்சிதா

 இந்நிலையில் முறையாக விவாகரத்து பெற்ற பிறகு   நடிகை ரச்சிதாவுக்கு 2வது  திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.  ரச்சிதா 'ரங்கநாயகா' என்ற கன்னடப் படத்தில் நடித்த போது, அந்தப் படத்தின் இயக்குநருடன்அவருக்குக் காதல்  என பரபரப்பு செய்திகள் வெளியாகின.  தற்போது  அந்த இயக்குநரை தான் ரச்சிதா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக  ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் நடிகை ரச்சிதா தனது 2வது திருமணம் குறித்து எதுவும் இதுவரை  உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web