காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்!

 
கீர்த்தி சுரேஷ்
 நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகருடன் காதல், தெலுங்கு நடிகருடன் டேட்டிங், ரகசிய திருமணம் என்று ஒவ்வொரு முறை நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து வதந்திகள் வலம் வரும் போதெல்லாம் மெளனம் காத்து புன்சிரிப்புடன் கடந்துச் சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட நண்பரைக் காதலித்து வந்ததாகவும், அவரை டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், கேரள மீடியாக்களிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார் நடிகை கீர்த்தியின் தந்தை சுரேஷ். 

கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில்  கீர்த்தி சுரேஷ் தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்து அந்தோணி என்பவரை கடந்த 15 வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் இந்தக் காதல் இன்னும் பல வருடங்களுக்குத் தொடரும் என்றும் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். 

அந்தோணி கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக இருக்கிறார். பல ஆண்டுகளாக தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்த இந்த ஜோடி இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் தற்போது வெளிப்படையாக தங்களது காதலை அறிவித்திருக்கிறார்கள். டிசம்பர் 11ம் தேதி கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web