நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மனு... நாளை விசாரணை!
நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு மீதான விசாரணை நாளை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
சென்னை எழும்பூரில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக அவர் மீது மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது. இந்த வாழக்குகளில் கஸ்தூரியை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை திருநகரில் நாடார் மகாஜன சங்கம் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில இன்று மனு தாக்கல் செய்தார்.
அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்த மனு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வர உள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!