நடிகர் விஜய் கட்சிக்கு வந்த புதிய சிக்கல்.. ”TVK என்பது எங்கள் கட்சி தான்” முறையிட்ட கட்சி தலைவர்..!
தமிழகத்தில் டிவிகே என்ற கட்சி ஏற்கனவே உள்ள நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியின் பெயரும் அப்படியே இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கு பல்வேறு கட்சிகளும், அரசியல் பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டியில், “புதிய அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகள், சினிமாவை சேர்ந்த ஒருவரை உடனடியாக முதல்வராக்க வேண்டுமா என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. அவருடைய நிலை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்கள் முடிவு செய்வார்கள். அவர் அரசியலுக்கு தகுதியற்றவர் என்று கூற முடியாது.
TVK என்பது தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி என்ற எங்கள் கட்சியின் பெயரின் ஆங்கிலச் சுருக்கமாகும். அதுதான் நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியின் ஆங்கிலச் சுருக்கம். அவர் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியானால் இரு கட்சிகளும் ஒரே பெயரைக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து, ஆங்கில சுருக்கத்தில் கூடுதல் எழுத்தை சேர்க்க தேர்தல் கமிஷன் வலியுறுத்தும் வாய்ப்பு உள்ளது. இல்லை என்றால், அதை வலியுறுத்தி நாங்கள் மனு தாக்கல் செய்வோம்,'' என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க