ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்… நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்!!

 
ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்… நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்!!

எழுத்தாளர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். ஸ்ரீகாந்த்தை வெறும் நடிகர் என்கிற ஒற்றை வார்த்தையால் ஒதுக்கி விட முடியாது. ஜெயகாந்தனின் நெருங்கின நண்பர் என்கிற அடைமொழிக்குள் ஸ்ரீகாந்தின் ஆளுமை அடங்கும்.

ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்… நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்!!

பழகுவதற்கு குழந்தைத்தனமான நடிகர் ஸ்ரீகாந்த் 1965ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார். ‘வெண்ணிற ஆடை’ படம் ஜெயலலிதா, வெண்ணிறை ஆடை மூர்த்தி போன்றோர்க்கு நல்ல அறிமுகமாக இருந்ததைப் போலவே டாக்டராக நடித்த ஸ்ரீகாந்த்தின் நடிப்பும் பரவலாக கவனிக்கப்பட்டது. அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீகாந்த் 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.

சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த். எம்.ஜி.ஆருடன் இணைந்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்… நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்!!

ராஜா வெங்கட்ராமன் என்ற தனது பெயரை, சினிமாவிற்காக ஸ்ரீகாந்த் என மாற்றிக் கொண்டவர். 2017ல் ஸ்ரீகாந்த்திற்கு சதாபிஷேகம் நடைபெற்றது. அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web