மதுரையில் நடிகர் ஷிஹான் ஹுசைனின் உடல் நல்லடக்கம்!

பிரபல கராத்தே வீரரும், நடிகருமான ஷிகான் ஹுசைனின் உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மதுரையை பூர்வீகமாக கொண்ட கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி (60). இவர் இந்தியாவில் இஷின்-ரியூ கராத்தேயின் நிறுவனத் தலைவராகவும், தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஷிகான் ஹூசைன், ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அதனைத் தொடர்ந்து சென்னை பெசன்ட் நகரில் அவரது இல்லத்தில் ஷிகான் ஹுசைனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
ஷிகான் ஹுசைனி கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர் என்பதை கடந்து சிறந்த ஓவியர், சிறந்த சிற்பி என பன்முகத் திறமையாளர் என்று சொல்வதுடன் செல்லப் பிராணிகளின் பிரியராகவும் இருந்துள்ளார். இத்தகைய பன்முகத் தன்மையாளரான ஷிகான் ஹுசைனியின் உடலுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஷிகான் ஹுசைனியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதுரை காஜிமார் தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஷிகான் ஹுசைனியின் உடல் இஸ்லாமிய முறைப்படி மதுரை அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!