பிரபல நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து விலகினார்!
பிரபல தமிழ் பட நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாஜகவின் கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியில் இன்று இணைந்தார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ், பாஜகவில் இணைந்து முக்கிய பதவியைப் பெற்றார். அதன் பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக வலம் வந்தார். இதனிடையே ஆருத்ரா கோல்டு நிறுவனம் முறைகேடு வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தினர்.
ஆரூத்ரா வழக்குக்கு பிறகு பாஜகவில் ஆர்.கே.சுரேஷுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் அதனால் கட்சியிலிருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்த ஆர்.கே.சுரேஷை அகில இந்திய அமைப்புச் செயலாளராக நியமித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிட்ட நிலையில், ஆர்.கே.சுரேஷ் கூட்டணிக் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!