சபரிமலைக்கு மாலை அணிந்து தர்காவில் வழிபாடு செய்த நடிகர் ராம் சரண்!
தெலுங்கு திரையுலகில் முண்ணனி நடிகர் ராம் சரண். இவர், தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உட்பட பல நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
On fans Request #GlobalStar @AlwaysRamCharan garu visited a famous durgamma temple in kadapa and offered Poornakumbabishekam to Ammavaru 💥💥💥💥💥💥#RamCharanStormInKadapa pic.twitter.com/YPen7vwOGi
— SivaCherry (@sivacherry9) November 18, 2024
ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். ஜனவரி 10, 2025 பொங்கல் வெளியீடாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது ராம்சரண் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு மாலை அணிந்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன்பீர் பெரிய தர்காவில் நடைபெற்ற 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
இந்நிகழ்வுக்கு 3 மாதங்களுக்கு முன்பே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்த நிலையில், தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து வருகை புரிந்துள்ளார். அத்துடன் அங்குள்ள துர்கா தேவி கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். இவரின் வருகையை அறிந்து கடப்பா நகரம் முழுவதும் ரசிகர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!