நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. இன்று சென்னையில் இறுதிசடங்குகள்!

 
பிஜிலி

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் சென்னையில் காலமானார்.

2019ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடித்த 'நட்பே துணை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிஜிலி ரமேஷ். அதன் பின்னர், பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி உள்ளிட்ட ஏராளாமான திரைப்படங்களில் அடுத்தடுத்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பிஜிலி

குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் கூட, குடிப்பழக்கத்தால் தான், தனது வாழ்க்கை இப்படியானதாகவும், அதனால் யாரும் தயவு செய்து  குடிக்கு அடிமையாக வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.

பிஜிலி

இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று நடிகர் பிஜிலி ரமேஷ் உயிரிழந்தார். அவரது இறுதிசடங்குகள் இன்று மாலை 5 மணிக்கு சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web