சன்ரைசர்ஸ் நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜீத்... வைரலாகும் போட்டோஸ்!
தமிழ் திரையுலகில் ’தல’ ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் . இவர் எங்கு சென்றாலும் அதை புகைப்படங்கள் வீடியோக்கள் பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் அவரது வெறித்தனமான ரசிகர்கள். அந்த வகையில் அஜீத் சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர் நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#AK and Cricketer #Natarajan 👌 pic.twitter.com/cArsGHpSFj
— Ramesh Bala (@rameshlaus) April 4, 2024
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பந்துவீச்சாளருமான நடராஜன் இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நேற்று இரவு நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நடிகர் அஜித் கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை அஜித் ரசிகர்கள் தற்போது டிரண்டாக்கி வருகின்றனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!