இந்த ஏரியாவுல பால் விநியோகம் தாமதமாகலாம்... ஆவின் திடீர் அறிவிப்பு!

 
ஆவின்

 தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி, விநியோகம், விற்பனையை செய்து வருகிறது. இன்று ஒரு சில இடங்களில் பால் விநியோகம் தாமதமாகலாம் எனத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்படக்கூடும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின்

இதன்படி பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரங்கள் தாமதமாகலாம். இதனை சீராக்க ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆவின்

அனைத்து இடங்களிலும் சீரான பால் விநியோகத்தை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இருப்பினும் இத்தகைய காலதாமதத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில்  இந்த சூழலில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகவும் ஆவின் நிர்வாகம்  தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web