ஆத்தாடி... குருவிக்கூடு போல ரூமுக்கு மாத வாடகை ரூ. 25,000!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் மிகச்சிறிய அறைக்கு மாத வாடகையாக ரூ. 25000ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. சொந்த ஊரிலிருந்து பெங்களூருவுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர், தான் வாடகைக்கு எடுத்த அறை குறித்து தங்கியுள்ளார். இது குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நகர்ப்புறங்களில் வீடுகளுக்கு ஏற்படும் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்திக்கொண்டே செல்கிறது. நாளுக்குநாள் அதிகரிக்கும் நகர்ப்புற மக்கள் தொகையானது நகர்ப்புற திட்டமிடலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. சென்னை உட்பட பெங்களூரு, மும்பை, புனே, டெல்லி ஆகிய நகரங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் என கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையே இவை காட்டுகின்றன.
பெங்களூருவில் வேலைக்காகச் சென்ற இளைஞர் ஒருவர், தான் வாடகைக்கு எடுத்துள்ள அறை குறித்து விளக்குவதன் மூலம் அங்கு வாழ்க்கை முறையின் அவலத்தை, உண்மையை உணரலாம்.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் அறையின் நடுவில் நின்று தனது இருகைகளையும் விரித்து காட்டுகிறார். இரு கைகளையும் இருபுற சுவர்களைத் தொடுகின்றன. அந்த அளவுக்கு குறுகிய அகலம் உடையதாக அந்த அறை உள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.
தனது ஒரு காலை பின்பக்க சுவரை நோக்கித் தூக்கி தனது கையை முன்பக்க கதவை நோக்கி உயர்த்துகிறார். அந்த அளவே அறையின் நீளம் உள்ளது. இந்த அறைக்கு அவர் கொடுக்கும் வாடகைதான் வியப்பை ஏற்படுத்துகிறது. பராமரிப்பு செலவின்றி மாதத்துக்கு ரூ. 25,000 வாடகையாக வசூலிக்கப்படுவதாக கூறுகிறார்.
இந்த அறையில் வைக்க பொருள்களை வாங்கிக் குவித்து பணத்தை வீணாக்குவது தடுக்கப்படும். அந்த வகையில் இந்த அறையில் இருந்து பணத்தை சேமிக்கலாம் என சோகம் கலந்த புன்னகையோடு கூறுகிறார்
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதில் சிலர் மும்பையிலும் இதே நிலைதான் எனக் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். மும்பையிலும் இதே போன்ற நெருக்கடி தான். சில நாள்களில் புனேவும் இந்த நிலைக்கு மாறிவிடும். மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றால் எல்லா நகரங்களும் ஒரே மாதிரியானதாக ஆகிவிடலாம்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!