சாவிக்கொத்து, கத்தி , நகவெட்டிகளை விழுங்கிய இளைஞர்... ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்!

 
நகவெட்டி


இந்தியாவில் பீகார் மாநிலத்தில் வசித்து வரும் இளைஞன் என்ற ஆன்லைன் மொபைல் கேமை இடைவிடாமல் விளையாடி வந்தார்.  வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் அந்த கேமை விளையாட இடைவிடாமல் விளையாடி வந்ததால், அவரது குடும்பத்தினர் மொபைல் போனை புடுங்கி வைத்து கேம் விளையாட அனுமதி மறுத்தனர்.

ஆம்புலன்ஸ்


ஆத்திரமடைந்த சாவிக்கொத்து, 2 நகவெட்டிகள், கத்தி ஆகிய பொருட்களை அடுத்தடுத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் அவருக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால், சில மணிநேரங்கள் கழித்து அவரது உடல்நிலை மோசமடைந்தது.இதனையடுத்து வலியால் துடிக்க தொடங்கியதும், அவரது குடும்பத்தினர் மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்

அங்கு அவருக்கு எக்ஸ்ரே மூலம் அவரது வயிற்றில் கூர்மையான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த நபருக்கு 1.5 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு வயிற்றில் இருந்த பொருட்களை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினர். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web