அட... ஒரே நாளில் 7 பெண்களுடன் திருமணம்!!
அவனவன் ஒண்ண கல்யாணம் பண்ணியே சமாளிக்க முடியல.. இங்க ஒரு மனுஷன் ஒரே நாளில்7 பேரை கல்யாணம் பண்ணியிருக்கான் .. நீயெல்லாம் தெய்வம்டா சாமி என்ற வடிவேலு பாணி சினிமா டயலாக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹபீப் என்சிகோன்னே . இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது ஒரே நாளில் 7 பெண்களை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ஹபீப் பெரும் பணக்காரர் என்பதால், இஸ்லாமிய முறைப்படி ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் மணமகள்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் ஹபீப் புதிய கார்களைப் பரிசாக வழங்கியுள்ளார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவிகளைப் பாராட்டிய ஹபீப், தனது மனைவிகள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். திருமணம் செய்து கொண்டவர்களில் இருவர் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க, அனைவரையும் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டதாக ஹபீப் தெரிவித்துள்ளார். இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியானது எனக் கூறியுள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!