வாழ்ந்தா அவனோட தான்... காதலனுக்காக திருநங்கையாக மாறிய இளைஞர்.. !!
கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார் . இவர் நத்தம்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞருடன் நண்பராக பழகினார். இருவரும் நெருங்கிய நண்பர்களான பிறகு தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி காதலிக்கத் தொடங்கினர். இதனையடுத்து அந்த இளைஞன் வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். நண்பனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய வினோத்குமார், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறி பெயரை வினோதினி எனவும் மாற்றிக் கொண்டார். இதன் பிறகு இருவரும் ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வினோதினியுடன் குடும்பம் நடத்த முடியாது எனக்கூறிவிட்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கே சென்றுவிட்டார். மகன் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவருக்கு திருமணம் செய்ய அவரின் பெற்றோர்கள் அவசரப்படுத்தினர். வினோதினி, அவர்களது வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார். மேலும், அந்த இளைஞரை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி ஊர் பஞ்சாயத்திலும் முறையிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஊர் பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் வினோதினியை கடுமையாக தாக்கி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோதினி, இளைஞனுக்கு எதிராக புகார் அளிக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே அங்கு வந்து தடுக்க முயன்றதில் மண்ணெண்ணெய்யை எடுத்து குடித்த வினோதினியை காப்பாற்றினர். போலீசார் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வினோதினி, “என்னை திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை செய்ய சொன்னதே அவன் தான். அவனை நம்பித்தான் நானும் அறுவை சிகிச்சை செய்தேன். 7 வருடங்களாக இருவரும் ஒற்றுமையாகதான் இருந்தோம். இப்போது அவன் என்னிடம் உன்னைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் வினோ... ஆனா எங்க அம்மா என்ன கல்யாணம் பண்ணச் சொல்றாங்கனு சொல்றான். அதுகுறித்த ஆடியோவும் என்கிட்ட இருக்கு. என்னுடைய வாழ்க்கையே அவனால்தான் வீணாகப் போயிடுச்சி. அவன் கூட மட்டும்தான் வாழ்வேன்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...