அதிர்ச்சி வீடியோ.. நண்பரின் திருமணத்தில் பரிசைக் கொடுத்ததும் மயங்கி சரிந்து இளைஞர் மரணம்!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், தனது நண்பரின் திருமணத்தில் கலந்துக் கொண்ட இளைஞர் ஒருவர் மணமேடையில் நண்பருக்கு திருமணப் பரிசை அளிக்கும் போது மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மண்டபத்தில் திருமண வைபவத்திற்காக வாழ்த்த மகிழ்ச்சியுடன் கூடியிருந்தவர்களிடையே இந்த சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தி நிகழ்வு சோகமாக மாறியது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் பெனுமடா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த இளைஞர் வம்சி என்பவர் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
A joyful occasion turned tragic when a man suffered a fatal heart attack on stage while presenting a wedding gift to his friend.
— The Siasat Daily (@TheSiasatDaily) November 21, 2024
The incident occurred in Penumada village of Krishnagiri mandal of Kurnool district, Andhra Pradesh. The deceased has been identified as Vamsi who… pic.twitter.com/3k3R0QN7Kp
சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நண்பர்கள் குழு மணமகனுக்கு திருமண பரிசை வழங்குவதைக் காணலாம். உற்சாகமான மணமகன் பரிசைத் திறக்கும்போது, குழுவில் உள்ள மற்றவர்களை தன்னைக் காப்பாற்றும் படி உதவி கோரி வம்சி கைகளை நீட்டினார்.
நண்பர்கள் நிலைமையை புரிந்து கொள்வதற்குள், வம்சி மேடையிலேயே சரிந்து விழுந்தார். அவரது நண்பர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்தியாவில் இளைஞர்களிடையே மாரடைப்பு சமீப ஆண்டுகளில் அதிகரித்து வரும் கவலையாக உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 25-30 சதவீத மாரடைப்பு வழக்குகள் இப்போது 40 வயதுக்குட்பட்ட நபர்களை உள்ளடக்கியதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன, இது முந்தைய தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் இது அப்பட்டமான அதிகரிப்பு. விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதும் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முக்கியமாகும்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!