சபாஷ்... பறவைகளுக்காக தீபாவளி பட்டாசே வெடிக்காத கிராமம்!
நாளை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு, புத்தாடை , பட்சணம் என விற்பனை கனஜோராக களைகட்டி வருகிறது. திருப்பத்தூா் அருகே ஏ.மேலையூா் அய்யாபட்டி ஊராட்சிக்குள்பட்ட கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமங்களில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்தச் சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 38.426 ஹெக்டோ். பெரிய கொள்ளுகுடிபட்டி கண்மாய் 13.66 ஹெக்டேரிலும், சின்னக்கொள்ளுக்குடிபட்டி கண்மாய் 6.351ஹெக்டேரிலும், வேட்டங்குடி கண்மாய் 16.415 ஹெக்டேரிலும் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.
இந்தச் சரணாலயத்துக்கு செப்டம்பா் முதல் வாரத்திலிருந்தே ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா இன்னும் பிற நாடுகளிலிருந்து பறவைகள் வரத்தொடங்கும். பின்னா், இந்தப் பறவைகள் இங்கேயே இனப்பெருக்கம் செய்து குஞ்சு பொரிக்கும். சின்னச்சீழ்க்கை சிரவி, நீலச்சிரவி, நத்தைக் குத்திநாரை, மஞ்சள் மூக்குநாரை, உன்னிக்கொக்கு, பாம்புத்தாரா, உட்பட 3,50-க்கும் மேற்பட்ட பறவைகள் இனப் பெருக்கத்துக்கு ஏதுவாக கூடுகட்டி வசித்து வருகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு காலங்காலமாக கிராம மக்கள் இங்கு பட்டாசு வெடிப்பதை தவிா்த்து வருகின்றனா்.இந்தச் சரணாலயம் அருகே அமைந்துள்ள இந்தக் கிராம மக்கள் வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகளுக்கு எந்தவிதமான தொந்தரவு தரக்கூடாது என்ற நோக்கத்தில் ஓசை , இரைச்சல் ஒலி இல்லாத தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா்.இவா்களின் செயல்களைப் பாராட்டி, 200 குடும்பங்களுக்கு வனச் சரக அலுவலா் இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!