தைலம் டப்பாவை விழுங்கிய இரண்டரை வயது குழந்தை.. போராடி வெளியே எடுத்த மருத்துவர்கள்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹசீனாபானுவுக்கு ஆலியா என்ற இரண்டரை வயதில் மகள் உள்ளார். ஹசீனாபானு வேலைக்கு செல்வதால் குழந்தையை தனது தாய் மேகராசிபானுவிடம் விட்டு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று ஹசினாபானு குழந்தையை தாயிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.
இந்நிலையில், மாலை 6 மணியளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அப்போது எதிர்பாராதவிதமாக தைலம் டப்பாவை விழுங்கியது, அது தொண்டையில் சிக்கியது. இதனால் குழந்தை அலறியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு மேகராசிபானு என்னவென்று பார்த்தபோது, தொண்டையில் தைலம் பாட்டில் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக உறவினர்களை அழைத்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். மருத்துவர் சிவகரன் மற்றும் அங்கு பணிபுரியும் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் உதவியுடன் 15 நிமிடம் போராடி குழந்தை ஆலியாவின் தொண்டையில் சிக்கியிருந்த தைல பாட்டிலை பத்திரமாக அகற்றினார்.
தொண்டைக்குள் செல்லாமல் வெளியில் மாட்டிக்கொண்டதால் குழந்தை மயக்கம் அடையவில்லை என்றார். தொண்டையில் சிக்கியிருந்த தைல பாட்டிலை பாதுகாப்பாக அகற்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவமனை மருத்துவர் சிவகரனுக்கு குழந்தையின் குடும்பத்தினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!