பெரும் சோகம்... 2 வருஷமா கழிவறையில் வசிக்கும் தம்பதி... 7 மாத குழந்தையுடன் அவலம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமம் அண்ணாநகர் பகுதியில் அரசு சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையில் தான் தினகரன் பொன்னியம்மாள் தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இங்குள்ள குளியலறையில் படுக்கை அறையாகவும் கழிவறையை பொருட்கள் வைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
பழங்குடி இனத்தை சேர்ந்த தினகரனும் அவரது பெற்றோரும் வசித்து வந்த வீடு நான்காண்டுகளுக்கு முன் மழையால் இடிந்து சேதம் ஆனது. இதையடுத்து சகோதரர் வீட்டில் வசித்து வந்த தினகரனுக்கு பொன்னியம்மாள் உடன் திருமணமானவுடன் போக்கிடம் இல்லாமல் தவித்தனர். அப்போது அரசு கட்டித்தந்த பொது கழிவறை கட்டிடத்தில் குடியேறிய இவர்கள் அப்போது முதல் அங்கு தான் வசிக்கிறார்கள். இப்போது இவர்களுக்கு 7 மாத கைக் குழந்தையும் உள்ளது.
ஏழ்மையில் வாடும் பழங்குடி இனத்தவரான தினகரன் பொன்னியம்மாள் தம்பதிக்கு வீடு கட்டித் தரவேண்டும் என்று கூறுகிறார்கள் இப்பகுதி சமூக செயற்பாட்டாளர்கள். பழங்குடி மக்களுக்கு அரசு திட்டங்களை பெறுவதற்கான வழி முறையான அவர்களுக்கு படிப்பறிவு இல்லாத காரணத்தால் அந்த முறையான அரசு திட்டங்களும் பிரதமருடைய திட்டங்களும் போய் சேருவதில்லை. அண்ணாநகர் பகுதியில் பழங்குடியின மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்தாலும் இவர்களுக்கான வீடு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்ற புகாரை அப்பகுதி மக்கள் அடுக்கடுக்காக வைக்கின்றனர். இந்த நிலமை மாற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!