நடு ராத்திரியில் ரயிலை கடத்திய மர்ம நபர்.. கத்தி முனையில் பயணிகளை பணயக் கைதியாக வைத்திருந்த கொடூரம்..!

 
சுவிட்சர்லாந்து ரயில்

சுவிட்சர்லாந்தில் உள்ள யவெர்டன் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 14 பயணிகள் மற்றும் 1 நடத்துனர்களுடன் ஒரு ரயில் நின்று கொண்டு இருந்தது. இந்த ரயிலை 32 வயதுடைய மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலை கடத்தி சென்ற மர்ம நபர், பயணிகளை கத்தி, கோடாரியால் மிரட்டி பணயக்கைதிகளாக வைத்திருந்தார்.

Switzerland Train Hostage: Hostage Crisis On Swiss Train, Suspect With An  Axe, WhatsApp Negotiations

ரயிலில் 14 பயணிகள் இருந்தனர். மேலும், ரயில் நடத்துனர் ஒருவரை மிரட்டி, பயணிகளிடம் நெருங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்குள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதலில் அந்த நபரிடம் வாட்ஸ்அப் மூலம் பேச்சு நடத்தினர். பின்னர் அந்த நபர் முதலில் ஈரானின் முக்கிய மொழியான ஃபார்சியிலும், பின்னர் ஆங்கிலத்திலும் பேசினார். மாலை 6.35 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் போலீசார் ரயிலுக்குள் நுழைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் போலீசாரை கோடாரியால் தாக்க, வேறு வழியின்றி போலீசார் சந்தேக நபரை சுட்டுக் கொன்றனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சந்தேகநபர் எதற்காக ரயிலை கடத்தினார் என்பது குறித்தும், அவரது நோக்கம் என்ன என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுபோன்ற சில சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Hostage Situation on Swiss Train Ends With Suspect Killed In Police Raid -  News18

முன்னதாக நவம்பர் 2021 இல், கடிகார நிறுவனத்தின் முதலாளி மற்றும் அவரது குடும்பத்தினர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். பின்னர், அவர்களை தாக்கி தங்கத்தை திருடி பிரான்சுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஜனவரி 2022 இல், விலைமதிப்பற்ற உலோகங்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு நிறுவனத்தின் பெட்டகங்களை அணுக முயன்றபோது, ​​​​இரண்டு குற்றவாளிகள் ஊழியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்தனர். ஆனால் கடைசியில் கொள்ளையடிக்காமல் ஓடிவிட்டனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web