கழிவறை பீங்கானில் மாட்டிக்கொண்ட சிறுவனின் கால்.. போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.!

 
வினோத்

சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் தனியார் நிறுவன ஊழியர் வினோத். நேற்று மாலை அவரது மூன்றரை வயது மகன் கழிவறைக்கு சென்றபோது, ​​சிறுவனின் கால் கழிவறை பீங்கானில் சிக்கியது. காலை வெளியே எடுக்க முடியாமல் சிறுவன் அலறினான். இதையடுத்து பெற்றோர் சிறுவனின் காலை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், அது முடியாமல் போனதால், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் சிறுவனின் காலை வெளியே எடுக்க முயன்றபோது பீங்கான் அறைக்குள் கால் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பயத்தில் உறைந்த சிறுவனை ஆறுதல்படுத்தும் போது கவனத்தை திசை திருப்பி பீங்கான் முழுவதையும் உடைத்து காலில் சிறு காயம் கூட இல்லாமல் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Rescued

தகவல் கொடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினருக்கு சிறுவனின் காலை பத்திரமாக மீட்ட சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web