வீடியோ... ரயிலில் பயங்கர தீவிபத்து .. 5 பெட்டிகள் எரிந்து நாசம்!!
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம், நாராயண்டோஹ் ரயில் நிலையத்துக்கு அருகே பயணிகள் ரயிலின் ஐந்து பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. தீவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Fire in train, no injuries! Diesel Multiple Unit between New Ashti-Ahmednagar catches fire between Narayandoh to Ahmednagar section. Fire reported in the 5 coaches at 3pm, extinguished at 4:10 pm. No casualties or injuries. #Maharashtra @mid_day pic.twitter.com/ISDOpLTyxX
— Rajendra B. Aklekar (@rajtoday) October 16, 2023
அஷ்தி ரயில் நிலையத்திலிருந்து அகமதுநகர் ரயில்நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில், திடீரென தீப்பற்றியது. ரயில் பெட்டிகள் முழுவதும் தீ பரவுவதற்குள், நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் ரயிலிலிருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.தீ விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். சமீப காலமாக ரயில்கள் தொடர்ந்து ஏதேனும் விபத்துகளை எதிர்கொண்டு வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் மகாராஷ்டிராவின் அகமதுநகரில் இருந்து அஸ்திக்கு ஓடும் புறநகர் ரயிலின் ஐந்து பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ரயிலில் தீ பற்றி எரியும் காட்சிகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...