பயங்கர விபத்து.. பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 6 பேர் பலியான சோகம்!

 
அமராவதி பேருந்து விபத்து

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மகாராஷ்டிராவில் உள்ள சாவ்லா நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 6 மணியளவில் அமராவதியில் இருந்து தர்ணிக்கு 60 பயணிகளுடன் புறப்பட்டது.

இந்த பேருந்து காலை 8.30 மணியளவில் மேல்கோட் புலிகள் காப்பகம் வழியாக சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web