பயங்கர விபத்து... அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 5 பேர் பலி… 20 பேர் படுகாயம்!

 
 விபத்து

மகாராஷ்டிரா  மாநிலம் புல்தானா மாவட்டத்தில் பரபரப்பான காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில்  வேகமாக வந்து கொண்டிருந்த கார்  கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது.  அதே நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு தனியார் பேருந்து விபத்தில் சிக்கி இருந்த வாகனங்களின் மீது மோதியது. இப்படி  தொடர்ந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனை

இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த தகவல் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

போலீஸ்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக  உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  விபத்தில் சிக்கிய 3 வாகனங்களையும் சரி செய்யும் பணிகளில்  ஈடுபட்டனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web