அதிர்ச்சி வீடியோ... நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த குமரி மீனவரின் படகு!
நடுக்கடலில் குமரி மீனவரின் விசைப்படகு தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி மீனவர்கள் விசைப்படகில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென குமரி மீனவரின் விசைப்படகில் தீப்பற்றி திகுதிகுவென எரியத் தொடங்கியது. இந்தத் தீ மளமளவென படகு முழுவதும் எரிந்து நீரில் மூழ்கத் தொடங்கியது.
#WATCH | கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவரின் விசைப்படகில் பற்றிய தீ - படகு முழுவதும் எரிந்து நீரில் மூழ்கியதால் படகின் உரிமையாளர் வேதனை!
— Sun News (@sunnewstamil) August 25, 2024
மின் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் படகில் தீ பற்றி இருக்கலாம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்.#SunNews |… pic.twitter.com/GfH184z6xq
இதனால் படகில் சென்றவர்கள் கடும் வேதனை அடைந்தனர். படகின் உரிமையாளர் வேதனை அடைந்துள்ளனர். மின் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் படகில் தீப்பற்றி இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா