10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

 
10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!


இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!


தற்போது சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சில மாணவர்கள் பள்ளி அமைந்திருக்கும் நகரத்தில் இருந்து வேறுநகரத்தில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அவர்களுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் சில மாணவர்கள் தங்கள் பள்ளி அமைந்திருக்கும் நகரங்களில் வசிக்காமல் அருகில் உள்ள வேறு நகரங்களில் வசிக்கிறார்கள்.இவர்கள் தேர்வு மைய நகரத்தை மாற்ற அந்தந்த பள்ளிகளுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துக் கொள்ளலாம்.

10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!


அவை பள்ளிகள் மூலம் பரிசீலிக்கப்படும். அதே நேரம் ஆன்லைன் மூலம் அந்த கோரிக்கையை சி.பி.எஸ்.இ. கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றி பதிவு செய்ய வேண்டும். மாணவர்களும், பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. இணையதளத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். தேர்வு அட்டவணை தயாரான பிறகு தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web