காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!

தேனி மாவட்டத்தில் உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல் துறை அதிகாரிகள் இன்று மார்ச் 29ம் தேதி சுட்டுப் பிடிக்க முற்பட்டதில் அவர் உயிரிழந்தார்.
கஞ்சா வியாபாரியாக அறியப்படும் பொன்வண்டு என்ற அந்த நபர், இன்று தனது வீட்டில் பதுங்கியிருந்தபோது அங்கே அவரை கைது செய்ய வந்த காவலர்களிடம் சிக்காமலிருக்க, அவர்களை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். அப்போது அவரை காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது. தேனி மாவட்டம் கம்பம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன், முத்துக்குமார் என்கிற காவலரை பொன்வண்ணன் தகராறில் அடித்துக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உசிலம்பட்டி கள்ளபட்டியில் வசித்து வருபவர் 34 வயது முத்துக்குமாா் . இவர் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலை பணி முடிந்த நிலையில், உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன்பட்டியில் உள்ள மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தாா். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலருக்கும், காவலா் முத்துக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்தக் கும்பல் முத்துக்குமாரை தாக்கியதில் அவா் கீழே விழுந்தாா். அப்போது, அங்குள்ள கல்லை எடுத்து அவா் மீது போட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸாா் காவலா் முத்துக்குமாா், அவரது நண்பா் ராஜாராம் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முத்துக்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், காவலா் முத்துக்குமாா் மது அருந்திய போது, அங்கு கஞ்சா வழக்கில் சிறை சென்று பிணையில் வந்த உசிலம்பட்டியைச் சோ்ந்த பொன்வண்டு தனது நண்பா்களுடன் வந்தாா். அப்போது, காவலா் முத்துக்குமாா் பொன்வண்டுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இதனால், ஏற்பட்ட தகராறில் பொன்வண்டும், அவரது நண்பா்கள் சோ்ந்து காவலா் முத்துக்குமாரைக் கொலை செய்தது தெரியவந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!