அதிர்ச்சி வீடியோ... ஓடும் ரயிலில் இருந்து கீழே விழும் பயணி.!
இந்தியா முழுவதும் நடுத்தர மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில்களையே நம்பியுள்ளனர்.அதே நேரத்தில் உள்ளூர் பயணங்களுக்கும் குறைவான வேகமான சேவைக்காகவும் உள்ளூர் ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். ரயில் கிளம்பும் நேரத்தில் ஓடி வந்து ரயிலில் ஏறுவது தொங்கிக் கொண்டே பயணம் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
#Pune: Heroic MSF Staffer Saves Passenger from Imminent Danger on Udyan Express pic.twitter.com/X7d4JSFjaJ
— Punekar News (@punekarnews) March 28, 2024
புனே ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைவீரர் ரயிலில் இருந்து கீழே விழுந்த பயணி ஒருவரை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே போல் ரயில் நிற்பதற்குள் கீழே இறங்குவது, ஏறுவது, வாயிலில் கூட்டமாய் நின்று கொண்டிருப்பது என அலட்சியமாக இருப்பதையும் காணமுடிகிறது. அந்த வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு அதிர்ச்சிதரும் சிசிடிவி வீடியோவை பதிவிட்டுள்ளது.அந்த வீடியோவில், ஒரு பயணி அவசரமாக ஓடி வந்து ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்கிறார். திடீரென எதிர்பாராதவிதமாக அந்தப் பயணி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்து விடுகிறார்.
இவரை உடனடியாக ஓடிச்சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றுகிறார். அவர் வேகமாக பயணியை பிடித்து இழுத்து காப்பாற்றுகிறார். புனே ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 3ல் இருந்து வேகமாக வந்த ரயிலில் நசுங்கும் அபாயத்தில் இருந்த அவரை பிளாட்பாரம் நோக்கி இழுத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!